Posts

Madras Atomic Power Station Unit One Accident I Dr V Pugazhenthi MBBS I TuNo

கல்பாக்கம் அணு உலை விபத்து : அறிவியல் பிரச்சினை நிர்வாகப் பிரச்சினையாக மாற்றப்படும் கதை மருத்துவர் வீ.புகழேந்தி எம்பிபிஎஸ் 30 நிமிடம் 30.1.2018 ஆம் தேதியில் இருந்து இன்றுவரை கல்பாக்கத்தில் உள்ள மெட்ராஸ் அணுமின் நிலையத்தின் முதல் அலகு அங்கு ஏற்பட்டுள்ள கதிரியக்கக் கசிவின் காரணத்தினால் மூடப்பட்டுள்ளது. கதிரியக்கக் கசிவு எங்கு எதனால் ஏற்பட்டது என்பதற்கான பதிலை இன்றுவரை அணு உலை நிர்வாகம் கண்டு பிடிக்கவில்லை. இந்தக் கதிரியக்கக் கசிவினால் அணு உலையில் பணிசெய்பவர்களுக்கும், சுற்றி வாழும் மக்களுக்கும் பெரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த நிகழ்வினையும், அதனால் ஏற்பட்டுள்ள விளைவுகளையும், பிரச்சினையைத் தீர்க்க அணு உலை நிர்வாகமும், சுற்றி வாழும் மக்களும் என்ன செய்ய வேண்டும் என்பதனை கல்பாக்கம் சதுரங்கப்பட்டினத்தில் வாழும் மருத்துவர் வீ.புகழேந்தி அவர்கள் இந்தக் காணொலியில் விரிவாக விளக்குகிறார். அவரது உரையின் ஆங்கிலப் பிரதியைக் கீழ்வரும் வலைத் தளத்தில் இருந்து பதிவறக்கம் செய்து கொள்ளலாம்: உரையின் ஆங்கில மொழியாக்கம் Download pdf  Madras Atomic Power Station Unit One Accident I Dr V Pugazhent
Recent posts